
புரட்சிவிளையாட்டுக் கழகம்
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்

இவ்வருடத்துக்கான சாம்பியனாக முல்லை அணியை வீழ்த்தி, வெற்றி வாகை சூடியது மருதம் அணி.நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மருதம் அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது. பத்து ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பில் 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக பரணிதரன் 30 ஓட்டங்களையும் (20 பந்துகளில்) மற்றும், அட்சயன் 15 ஓட்டங்களையும் (8 பந்துகள்) பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து 86 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களம் கண்ட மருதம், இரண்டு பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை பெற்றது. நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன. அதிகபட்சமாக கோகிலவதனன் 32 ஓட்டங்கள் (22 பந்துகளில்) குரு 24 ஓட்டங்கள் (14 பந்துகளில்) பெற்றுக்கொண்டனர். 2024 ஆம் ஆண்டின் சாம்பியன் ஆனது மருதம்! ❤️czc;dv